பிரபல ஃபைனான்சியர் முகன்சந்த் போத்ரா மரணம்

சென்னை

பிரபல திரைப்பட ஃபைனான்சியர் முகன் சந்த் போத்ரா மரணம் அடைந்தார்.

பிரபல திரைப்பட ஃபைனான்சியர் முகன் சந்த் போத்ரா சென்னையில் வசித்து வருகிறார். இவர் திரைப்படங்கள் எடுக்க தயாரிப்பாள்ர்களுக்கு கடன் அளித்து வந்தார். இவர் மீது பல வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் இன்று மாலை 7 மணிக்கு அவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர் குடும்பத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்தா அறிக்கையில், “பிரபல திரைப்பட ஃபைனான்சியர் முகன் சந்த் போத்ரா இன்று மாலை ஏழு மணிக்கு மாரடைப்பால் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். நாளை அவரது திநகர் இல்லத்தில் அவருடைய இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி