நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா நலமாக உள்ளார்: நடிகர் அபி சரவணன் விளக்கம்

நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா நலமோடு இருப்பதாகவும், அவர் குறித்த வதந்திகளை யாரும் பரப்பிட வேண்டாம் என்றும் நடிகர் அபி சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரபல நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா, ஏராளமான மேடை கச்சேரிகள் நடத்தியுள்ளதோடு, தூள், ஏய், கோவில், தேவதையை கண்டேன் போன்ற படங்கள் முதல் சதுர அடி 3500 என்கிற படம் வரை நடித்தும், பாடியும் உள்ளார். சமீப நாட்களாக வயது மூப்பு காரணமாக உடல்நிலை மோசமாக உள்ள அவர், மூச்சுத்தினறல் காரணமாக மதுரை வேலம்மாள் மருத்துவமனையில், நடிகர் அபி சரவணனால் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் பரவை முனியம்மா இன்று காலை இறந்துவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் நலமோடு இருப்பதாகவும், சில நிமிடங்களுக்கு முன்பு தான் வீடியோ கால் மூலம் பரவை முனியம்மா அவர்களுடன் தான் பேசியதாகவும் தெரிவித்துள்ள நடிகர் அபி சரவணன், பரவை முனியம்மா நலமோடு இருப்பதை தாம் மீண்டும் தெரிவிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற வதந்திகளை தவிற்கும் படியும் அனைவருக்கும் நடிகர் அபி சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: abi saravanan, Actor, Folk Singer, Paravai Muniyamma, Tamil Movies, tamilnadu, Velammal Hospital
-=-