லாஸ் ஏஞ்சலஸ்

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜெரால்ட் பட்லர் பைக் விபத்தில் சிக்கினார்.

ஹாலிவுட் படங்களான டிராகுலா 2000. தி அக்லி ட்ரூத், காட்ஸ் ஆஃப் எகிப்த் போன்ற பல படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் ஜெரால்ட் பட்லர்.  47 வயதாகும் இவர் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வசித்து வருகிறார்.  இவருக்கு பைக்கில் சவாரி செய்வது மிகவும் பிடித்தமான ஒன்று.

ஜெரால்ட் பட்லர் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் பைக்கில் சென்றுக் கொண்டிருக்கும் போது ஒரு விபத்தில் சிக்கினார்.  உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சிறு காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும், எலும்பு முறிவு ஏதும் இல்லை எனவும் தெரிவித்தனர்.  ஓய்வுக்காக மருத்துவமனையில் ஜெரால்ட் தங்கி உள்ளார்.

ஏற்கனவே இவர் 2011ல் நடந்த பைக் விபத்தில் படுகாயம் அடைந்ததால் இவருடைய ரசிகர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.  மருத்துவ அறிக்கையை கண்டதும் கவலை நீங்கி உள்ளனர்.