பிரபல தமிழ் நடிகர் கஞ்சா கருப்பு அ.தி.மு.க.வில் இணைந்தார்

பிரபல தமிழ்த்திரை நடிகர் கஞ்சா கருப்பு அதிமுகவில் இணைந்துள்ளார்.

பிரபல தமிழ்த்திரை நடிகர் கஞ்சா கருப்பு. பிதாமகன் படத்தல் கஞ்சா விற்கும் வேடத்தில் அறிமுகமானார். அதன் பிறகு சிவகாசி, சண்டைக்கோழி, திருப்பதி, உனக்கும் எனக்கும், தாமிரபரணி, பருத்தி வீரன் உட்பட பல படங்களில் நடித்து பிரபலமானார். பொதுவாக நகைச்சுவை வேடங்களில் நடித்து வரும் இவர், சுப்பிரமணியபுரம் , நாடோடிகள் உள்ளிட்ட சில படங்களில்  குணச்சித்திர கதாபாத்தரங்களில்  நடித்து பெயர் பெற்றார்.

நாடோடிகள்  என்ற படத்தில் சிறந்த நகைச்சுவை நடிப்பிற்காக தனியார் தொலைக்காட்சி விருது பெற்றார்.  இடையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான  பிக்பாஸ்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் இன்று அவர் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் தன்னை  இணைத்து கொண்டார்..