பிரபல தமிழ்பட இயக்குனர் மரணம்

சென்னை

பிரபல தமிழ்ப்பட இயக்குனரும் சாண்டோ சின்னப்ப தேவரின் மருமகனுமான தியாகராஜன் இன்று மரணம் அடைந்தார்.

பிரபல தமிழ்ப்பட தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவரின் மூத்த மகள் சுப்புலட்சுமி.   இவருடைய கணவர் தியாகராஜன்.   இவர் தேவர் ஃபிலிம்ஸ் தயாரித்த வெள்ளிக்கிழமை விரதம், தாய் இல்லாமல் நான் இல்லை மற்றும் ஆட்டுக்கார அலமேலு உள்ளிட்ட 28 படங்களை இயக்கி உள்ளார்.   இதில் ரஜினிகாந்த் நடித்த தாய் மீது சத்தியம், அன்புக்கு நான் அடிமை உள்ளிட்ட 11 படங்களும் அடங்கும்.

தற்போது 75 வயதாகும் இவர் சென்னையில் போரூர் பகுதியில் வசித்து வருகிறார்.   இவருக்கு இன்று காலை  திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.   அவர் குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.    ஆனால் வழியிலேயே தியாகராஜன் மரணம் அடைந்துள்ளார்.

இவருக்கு வேல் முருகன் என ஒரு மகனும் சண்முக வடிவு என்னும் ஒரு மகளும் உள்ளனர்.    தியாகராஜனின் உடல் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.  திரையுலகத்தினர் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றானர்.   நாளைக் காலை அவரது இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.

You may have missed