பிரபல தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சன் மருத்துவமனையில் அனுமதி

புதுச்சேரி

பிரபல தமிழ் எழுத்தாளரான பிரபஞ்சன் புற்று நோய் காரணமாக புதுச்சேரி அருகில் உல்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல தமிழ் எழுத்தாளரான பிரபஞ்சன் புதிச்சேரியை சேர்ந்தவர் ஆவார் பிரஞ்சன் நீண்ட காலமாக சென்னையில் வசித்து வந்தர். தற்போது 74 வயதாகும் பிரபஞ்சன் புதிச்செரியில் உள்ள லாசுப்பேட்டையில் வசித்து வருகிறார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் நாவலும் எழுதி உள்ளார். இவர் உயரிய இலக்கிய விருதான சாகித்ய அகாடமி விருதை பெற்றவர் ஆவார்.

பிரபஞ்சன் கடந்த ஓராண்டு காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு புதுவை மாநிலத்தில் உள்ள மதகடிப்பட்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு மாத சிகிச்சைக்குப் பின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதனால் விட்டுக்கு திரும்பி பல நிகழ்வுகளில் பங்கேற்றார்.

இந்நிலையில் அவருடைய உடல் நிலை மீண்டும் பாதிப்பு அடைந்துள்ளது. அதை ஒட்டி அவர் புதுச்சேரி மதகடிப்பட்டியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கபட்டுள்ளர். மருத்துவர்கள் பிரபஞ்சனுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.