பிரபல வயலின் இசைக்கலைஞர் டி என் கிருஷ்ணன் மரணம்

சென்னை

பிரபல கர்நாடக வயலின் இசைக்கலைஞர் டி என் கிருஷ்ணன் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார்.

கர்நாடக இசை உலகில் மிகவும் புகழ்பெற்ற வயலின் இசைக்கலைஞர் டி என் கிருஷ்ணன் ஆவார்.

அவர் சிறுவயதில் இருந்தே தனது தந்தையிடம் இசைப்பயிற்சி பெற்றுள்ளார்.

தனது 8 ஆம் வயதில் முதல் மேடைக்கச்சேரி செய்தார்.

இவர் சென்னை இசைக் கல்லூரியில் இசைப் பேராசிரியராகப் பணி புரிந்துள்ளார்.

டில்லி பல்கலைக்கழக இசை மற்றும் கலைப்பள்ளியின் முதல்வராக பணி ஆற்றி உள்ளார்.

டி என் கிருஷ்ணன் மத்திய அரசின் பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளைப் பெற்றுள்ளார்.

சுமார் 92 வயதாகும் அவர் உடல்நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.

அவரது மறைவு இசை உலகில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.