நக்கீரன் கோபால் கைது குறித்து பிரபல வாசிங்டன் போஸ்ட் செய்தி

த்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டது அகில இந்திய அளவில் மட்டும் உலக அளவில் முக்கிய செய்தியாகியிருக்கிறது.

நக்கீரன் வாரமிருமுறை இதழ் ஆசிரியர் ஆர்.ஆர்.கோபால் இன்றுகாலை காவல்துறையால் கைது செய்யப்பட்டார். ஆளுநர் குறித்து விமர்சித்து எழுதியதாக புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேசத்துரோக வழக்கு அவர் மீது பதியப்பட்டது. இதை ஏற்க முடியாது என்று நீபதிகள் தீர்ப்பளிக்கவே  கோபால் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த செய்தி தமிழகம் மட்டுமின்றி அகில இந்திய அளவில் பரபரப்பானது மேலும் உலகப்புகழ் பெற்ற ஆங்கில ஏடான வாசிங்டன் இதழிலும் இது குறித்த செய்தி வெளியாகி இருக்கிறது.

அச்செய்தியில், “பிரபல தென்னிந்திய பத்திரிகையாளரான நக்கீரன் கோபால் தமிழ்நாடு காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் ஆசிரியராக பொறுப்பேற்றிருக்கும் நக்கீரன் இதழில், கல்லூரி ஒன்றில் நடந்த பாலியல் ஊழல் குறித்த செய்தியில் ஆளுநரை தொடர்புபடுத்தி எழுதியிருப்பதாக  ஆளுநர் தரப்பில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து  தேசத்துரோக வழக்கில் கோபால் கைது செய்யப்பட்டார். ஆனால் கீழ் நீதிமன்றம், இப்பிரிவில் வழக்கு பதிந்தது சட்டத்துக்கு முரணானது என்று தெரிவித்து கோபாலை விடுவித்தது.

“அரசின் நடவடிக்கை பத்திரிகை சுதந்திரத்தை பலவீனப்படுத்துவதாக உள்ளது” என்றும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

மாநிலத்தின் முக்கிய அரசியல்தலைவர்களில் ஒருவரான மு.க.ஸ்டாலின், இக்கைதை கண்டித்து, “மாநில அரசின் செயல்பாடு “ஊடக சுதந்திரத்தை அச்சுறுத்துகிறது”  என்று குற்றம் சாட்டினார்.

கடந்த ஜூலையில், உலகளாவிய ஊடக கண்காணிப்புக் குழு,  “இந்தியாவில் பத்திரிகையாளர்களின் பணிச்சூழலில் ஒரு ஆபத்தான போக்கு நிலவுகிறது”  என்று தெரிவித்தது. மேலும் இந்தியாவில் செய்தியாளர்கள் பாதுகாப்புக்கு அரசாங்கம் உத்திரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கோரியது.

இந்தியாவின் பத்திரிகை சுதந்திரம் தரவரிசை இந்த ஆண்டு இரண்டு புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 138 வது இடத்தை எட்டிவிட்டது” என்று வாசிங்கடன் போஸ்ட் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.