விராட் கோலியுடன் செல்பி எடுக்க முயன்று மைதானத்திற்குள் வந்த ரசிகரால் பரபரப்பு

ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருக்கும் 2வது டெஸ்ட் போட்டியில் கோலியுடன் செல்பி எடுக்க முயன்று ரகரிகர் ஒருவர் மைதானத்துக்குள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

virat

இந்தியா வந்துள்ள வெண்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி ஒரு இன்னிங்சில் 272 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற விண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டர் முதல் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர் பாவெலை 22 ரன்களில் அஷ்வின் வெளியேற்றினார். பிராத்பெயிட் 14 ரன்களில் குல்தீப் பந்து வீச்சில் சிக்கினார். ஹோப் 36 ரன்கலில் உமேஷ் வேகத்தில் வெளியேற, முதல் நாள் உணவு இடைவேளையின் போது அந்த அணி, 3 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில் கோலியுடன் செல்பி எடுக்க விரும்பிய ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் 70 மீ. தூரம் ஓடி வந்தார். மைதானத்திற்குள் கோலியை கட்டிப்பிடிக்க அந்த ரசிகர் முயன்ற போது கோலி அவரிடமிருந்து விலகிச்சென்றார். இருப்பினும் அந்த ரசிகர் கோலியுடன் செல்பி எடுத்தார். அதற்குள் பாதுகாப்பு அதிகாரிகள் வந்து அவரை மைதானத்தை விட்டு வெளியேற்றினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.