டில்லி

வாகனங்களுக்கு விசேஷ பதிவு எண் (ஃபேன்சி ரிஜிஸ்டிரேஷன் நம்பர்) வழங்க விடப்பட்ட ஏலத்தில் 001 என்னும் எண் ரூ 16 லட்சத்துக்கு ஏலம் போனது.

கார்களுக்கு ஃபேன்சி பதிவு எண் கோரும் வாகன உரிமையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  அதனால் டில்லி அரசு இது போன்ற எண்களை கடந்த 2014ஆம் வருடம் முதல் ஏலத்தில் விடுகிறது.   அவரவர் விருப்பத்துக்கேற்ப ஏலத்தில் விலை கொடுத்து வாங்கி இந்த எண்களை பெற முடியும்.

அதில் 001 என்னும் எண்ணுக்கு மிகவும் போட்டியுள்ளது,   சமீபத்தில் விடப்பட்ட ஏலத்தில் இந்த எண் 16 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.  அதே போல் ஜேம்ஸ்பாண்டின் எண்ணான 007, மற்றும் 009 ஆகிய எண்களுக்கும் போட்டி அதிகம்.  இசுலாமியர்களிடையே அவர்களின் புனித எண்ணான 0786 என்னும் எண்ணுக்கு போட்டி அதிகம்,   இவ்வளவு விலை கொடுத்து இந்த எண்களை தனியார்களை விட நிறுவனங்களே வாங்குகின்றன

இந்த ஏலமானது தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் வாகன விற்பனை அதிகமாக உள்ளதால் மிகுந்த போட்டியுடன் இருக்கும்.  பலர் தங்களது ராசி எண்ணையும் பிறந்த தேதியை எண்ணாக மாற்றவும் இந்த ஏலத்தை நாடுகின்றனர்.

கடந்த 2010ஆம் ஆண்டு நரேந்தர் சிங் என்னும் சண்டிகர் வாசி 001 என்னும் எண்ணை ரூ.10 லட்சத்துக்கு ஏலம் எடுத்தார்..  ஆனால் அவரது வாகனத்தின் விலை அதில் பாதியே.   அச்சமயம் அவருடைய நிலத்தை சாலைக்காக அரசு எடுத்துக் கொண்டதில் அவருக்கு ரூ 2 கோடி வந்திருந்ததால் அவர் இதைப் பற்றிக் கவலைப்படவில்லையாம்