புவனேஸ்வர்:

ங்கடலில் கடந்த மாதம் இறுதியில் உருவான ஃபபானி புயல், அதி தீவிர புயலாக மாறி ஒடிசாவில் இன்று முற்பகலில் முழுமையாக கரையை கடந்து மேற்கு வங்கம் நோக்கி செல்கிறது. இது விரைவில் பலமிழக்கும் என்று வானிலை மையம் அறிவித்து உள்ளது.

தென் கிழக்கு வங்கக் கடலில் கடந்த மாதம் 25ந்தேதி உருவான ஃபானி, அதி தீவிரப் புயலாக மாறி, காலை 8 மணி அளவில் ஒடிசா கடற்கரையை நெருங்கியது. இதன் காரணமாக நேற்று முதல் தீவிர காற்று மற்றம் மழை பெய்து வந்த நிலையில், காலை  8.30 மணி அளவில் புயல் கண்ணின் ஒரு பகுதி பூரி கடற்கரையைத் தொட்டது. சுமார் ஒன்றரை மணி நேரத்தில் கண்பகுதி கரையை கடந்தது. இதன் காரணமாக, பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

அதி தீவிர புயல் என்பதால், புயலின் கண் பகுதி கரையை கடந்த போது மணிக்கு 245 கிலோ மீட்டர் வேகம் வரை சூறாவளி காற்று வீசியது. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

முன்னெச்சரிக்கையாக கடந்த 24 மணி நேரத்தில் கஜபதி, கஞ்சம், கட்டாக், ஜகத்சிங்பூர் ஆகிய 14 மாவட்டங்களில், தாழ்வான பகுதிகளில் வசித்த 11 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப் பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்  4000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புயல் காரணமாக பஸ், ரெயில், விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால், புயலின் பாதிப்பு காரணமாக உயிர்ச்சேதம் முற்றிலும் தவிர்க்கப்பட்டது.

இந்த நிலையில், புயலின் தாக்கத்தால் வேரோடு சாய்ந்துள்ள மரங்கள் மற்றும், மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகள் முழுமூச்சில் நடைபெற்று வருகிறது. மீட்பு படையினர் சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது ஃபோனி புயல், வடக்கு – வடகிழக்கே, மேற்குவங்கம் நோக்கி நகர்கிறது. அதன் பிறகு வங்கதேசத்தில் கரையைக் கடந்து வலுவிழக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.