சென்னை:

பானி புயல் எதிரொலியாக சென்னையில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில் உள்பட பல ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்து உள்ளது.

ஃபானி புயல் நாளை ஒடிசா பூரி கடற்கரையில் கரையை கடக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல ரயில்களை ரயில்வே ரத்து செய்துள்ளது.

ஃபானி புயலால் தமிழகத்திற்கு ஆபத்து இல்லை என்றாலும் அதன் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று மற்றும் நாளை, மறுநாள் இயக்கப்படவிருந்த 9 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

யஷ்வந்த்பூர் – முசாபர்பூர், சந்திரகாசி, ஹல்டியா, சாலிமர், ஹவுரா ஆகிய விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், திருவனந்தபுரம் – சாலிமர், யஷ்வந்தபூர் – ஹவுரா செல்லும் 3 விரைவு ரயில்கள் மற்றும் நாளை மறுநாள் சென்ட்ரல் – ஹவுரா கோரமண்டல் ஆகிய விரைவு ரயில்களும் ரத்து  செய்யப்படுவதால் அறிவிக்கப்பட்டு உள்ளது.