திதீவிர புயலாக மாறி உள்ள ஃபானி புயல் இன்று பகல்  ஒடிசாவில் கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  சுமார் 200 கிமீ வேகத்தில் காற்றுடன் மழையும் சேர்ந்து இன்று தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து மாநிலத்தை சேர்ந்த சுமார்  8 லட்சம் பேர் வீடுகளை விட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  இந்த புயல் ஒடிசாவில் பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பானி புயல் கரையை கடக்கத் தொடங்கி இருப்பதால் ஒடிசா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக கரைநோக்கி வரும் ஃபானி புயல் இன்று மதியம் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

புயல் எதிரொலியாக மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு சிறப்பு படையினர் புயலை எதிர்கொள்ளும் வகையில் பணியாற்றி வருகின்றனர்.

தற்போதைய சூழலில் பானி புயலால் ஏற்பட்டுள்ள நிலவரம் குறித்த புகைப்படங்கள்