கவின் – ரம்யா நம்பீசன்

லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகரன் மற்றும் வனிதா பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘நட்புனா என்னானு தெரியுமா’.

(எப்படி எல்லாம் தலைப்பு பிடிக்கிறாங்க..!)

விஜய் டிவி புகழ் ‘கவின்’ நாயகனாகவும், ரம்யா நம்பீசன் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.  தரண் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சிவா அரவிந்த் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் வீடியோ சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழா வரும் நவம்பர் 12-ம் தேதி சென்னை வடபழனியில் உள்ள விஜயா போரம் மாலில் நடக்க இருக்கிறது.

மாலை 5 மணி அளவில் நடைபெற இருக்கும் இந்த விழாவில் ஒரு முக்கியமான சிறப்பு உண்டு

பொதுவாக இது போன்ற திரைவிழாவில் திரையுலகினர், ஊடகத்தினர்தான் கலந்துகொள்வார்கள். இந்த விழாவில் ரசிகர்களுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல… அங்கு நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் ரசிகர்களும் கலந்து கொண்டு பரிசுகளை அள்ளிச் செல்லலாம்.

முதல் பரிசு, நான்கு பவுன் தங்க காசுகள்! அதோடு, ஆறு நாட்கள் சிங்கப்பூர், மலேசியா சுற்றுப் பயணம், சாம்சங் s-8 போன் என்று ஏகப்பட்ட பரிசுகள்.

வித்தியாசமாத்தான் யோசிக்கிறாங்க.