நடிகை காஜல் அகர்வாலின் பிறந்தநாளுக்கு ட்விட்டரில் வாழ்த்து மழை….!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக தொடர்ந்து நடித்து வருகிறார்.

இன்று காஜல் அகர்வாலின் 35வது பிறந்த நாள் என்பதால் அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது நடித்து வரும் Mosagallu என்ற படத்தின் போஸ்டர் ஒன்றும் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளிவந்துள்ளது.

விஷ்ணு மஞ்சு ஹீரோவாக நடிக்கும் அந்த படம் உலகின் மிகப்பெரிய ஐடி மோசடி கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் SMB Creation™ – Design & Digital Publicity Media பிறந்த நாள் வாழ்த்து கூறி போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது .