நம்ம ‘சின்ன யுவ்ராஜ் சிங்’ – கேரளாவின் தேவ்தத் படிக்கல்லை புகழும் ரசிகர்கள்!

துபாய்: ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கான ஆடும் கேரளாவின் தேவ்தத் படிக்கல்லை, இன்னொரு யுவ்ராஜ் சிங் என்று புகழ்கின்றனர் ரசிகர்கள்.

ஐதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய 20 வயதான இடதுகை பேட்ஸ்மேன் படிக்கல், 42 பந்துகளில் 56 ரன்களை அடித்தார். இவர், தான் ஏற்கனவே ஆடிய மூன்று அறிமுகப் போட்டிகளிலும் அரைசதம் விளாசியுள்ளார். ஐபிஎல் அறிமுகத்திலும் அதுதான் நடந்தது.

விஜய் ஹசாரே மற்றும் முஷ்டாக் அலி தொடர்களிலும் அதிக ரன்களை குவித்துள்ளார்.

இந்த ஐபிஎல் ஏலத்தில், தேவ்தத்தை வாங்கியது பெங்களூரு அணி நிர்வாகம். இவரின் ஆட்டத்தில், யுவ்ராஜ் ஸ்டைல் அதிகமாகவும், ஷேவாக் ஸ்டைல் ஓரளவும் கலந்திருந்தது என்று மகிழ்ச்சியாக தெரிவிக்கின்றனர் ரசிகர்கள். இவரை ‘சின்ன யுவ்ராஜ்’ என்றும் அழைக்கின்றனர்.

“கடந்த ஒரு மாதமாக பயிற்சியில் ஈடுபடுகிறோம். கேப்டன் கோலியுடன் இருக்கும் தருணங்களில் பல கேள்விகளைக் கேட்டு, எனது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டேன்” என்றுள்ளார்.