எச்.வினோத், இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. இதில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் அஜித். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் தாயின் அன்பை உணர்த்தும் பாடல் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் யுவன். இது தவிர படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு கடந்த ஒரு வருடங்களாக
அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் அஜித் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அஜித்தின் பிறந்தநாளிற்க்கு இன்னும் 100 நாட்களே உள்ளதாகவும், கவுண்டன் ஸ்டார்ட் என்றும், பதிவிட்டு, போஸ்டர்களை ஒட்டி, அதை ஷேர் செய்து வந்தார்கள் ரசிகர்கள்.