நடிகர் விஜய் பிறந்தநாளில் ரசிகர்கள் புதுசாதனை.. ஒரு கோடி கடந்து உச்சம்..

டிகர் விஜய்யின் 46 பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். விஜய்யின் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.
#HBDTHALAPATHYVijay என்ற ஹேஷ் டேக்கின் கீழ் விஜய் ரசிகர்கள் சாதனை செய்ய திட்டமிட்டனர். அதன்படி புதிய சாதனை படைத்துள்ளனர். ஒரு மகத்தான சாதனையாக 1 கோடி டிவிட்களைக் கடந்து சென்றது.

விஜய் மீதான ரசிகர்களின் முழுமையான அன்பு வெளிப்படுத்தும் சமூக ஊடக சாதனையாக மாறியது. ஏனெனில் கோலிவுட் நட்சத்திரம் ஒருவர் தனது பிறந்தநாளில் பதிவுசெய்த டிவீட்களில் இதுவே அதிகம்.


விஜய்யின் ‘மாஸ்டர்’ மற்றும் சிறப்பு ‘மாஸ்டர்’ போஸ்டரைத் தவிர அவரது 65 வது படம் குறித்து எந்த புதிய அறிவிப்பும் இல்லாதது சிலருக்கு ஏமாற்றமாக அமைந்தது.