நடிகை நிலாவுக்கு டோஸ் விட்ட ரசிகர்கள்.. ஹீரோவிடமே புகார்..

எஸ்.ஜே.சூர்யாவுடன் அன்பே ஆருயிரே படத்தில் நடித்தவர் நிலா. மருதமலை உள்ளிட்ட மேலும் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் தெலுங்கு, இந்தி மொழிகளி தனது சொந்தபெயரான மீரா சோப்ரா என்ற பெயரில் நடிக்கிறார்.

சமீபத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, ’எனக்கு ஜூனியர் என் டி ஆரைவிட மகேஷ்பாபுவைத்தான் பிடிக்கும்’ என்று மனம் திறந்து பதில் சொன்னார். அவரது பதில் மகேஷ்பாபு ரசிகர்களை குஷிபடுத்தியது ஆனால் ஜூனியர் என் டி ஆர் ரசிகர்களை கோபத்துக்குள்ளாக்கியது. அவர்கள் நிலாவையும் அவரது குடும்பத்தாரையும் கெட்ட வார்த்தைகளில் திட்டி தீர்த்து வருகின்றனர். அதைக் கண்டு அப்செட் ஆன நடிகை ஜூனியர் என் டி ஆரிடமே அவரது ரசிகர்கள் பற்றி டிவிட்டரில் புகார் அளித்திருக்கிறார்.
’என்னுடைய கருத்தை சொன்னதற்காக உங்கள் ரசிகர்கள் என்னையும் என் பெற்றோரையும் இப்படி திட்டலாமா? இதற்கு நீங்கள் பதில் சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்’ என தெரிவித்திருக் கிறார் நிலா.