நாகர்கோவில்:

ன்று ஒடிசாவில் கரைகடந்த ஃபானி புயலால் மிகப்பெரிய பாதிப்பு இல்லை என்று குறிப்பிட்ட இஸ்ரோ தலைவர் சிவன்பிள்ளை, துல்லிய கணிப்பு காரணமாகவே சேதங்கள் தவிர்க்கப்பட்டதாக தெரிவித்து உள்ளார்.

ஃபானி புயல் உருவானதில் இருந்து அது தொடர்பாக துல்லியமாக கணிக்கப்பட்டதாகவும், செயற்கைகோள் புகைப்படம் மூலம் ஃபானி புயல் நகர்வு துல்லியமாக புயல், கரையை கடக்கும் பகுதி குறித்து அறியப்பட்டதால், அந்த  பகுதியில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. புயலினால் ஏற்படும்  உயிர் சேதம் உட்பட பெரிய பாதிப்புகள் இல்லாமல் பாதுகாக்க முடிந்ததாக   நாகர்கோவிலில் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்து உள்ளார்.

 

அதி தீவிர புயலான ஃபானி ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய நிலையில் கண் பகுதி முழுவதுமாக கரையை கடந்தது. அப்போது மணிக்கு 245 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.  புயலின் கண் பகுதி கரையை கடந்த போது மணிக்கு 245 கிலோ மீட்டர் வேகம் வரை சூறாவளி காற்று வீசியது. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. பாரதீப்பில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

மத்திய மாநில அரசுகள் எடுத்த  முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் கடந்த 24 மணி நேரத்தில் கஜபதி, கஞ்சம், கட்டாக், ஜகத்சிங்பூர் ஆகிய 14 மாவட்டங்களில், தாழ்வான பகுதிகளில் வசித்த 11 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். அவர்கள் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு தயார் செய்வதற்காக 5 ஆயிரம் சமையலறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

புவனேஸ்வரத்தில் இன்று நள்ளிரவு வரை விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 140 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மின் விநியோகமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டன. வாக்கு எந்திரங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

தஅதி தீவிர புயலாக கரையை கடந்த ஃபானி தற்போது வலு குறைந்தது புயல் நகரும் பகுதிகளில் தற்போது 150 முதல் 160 கிமீ வேகத்தில் காற்று வீசி வருகிறது.