டெல்லி: உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அழைப்பை நிராகரிப்பதாக  விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. பஞ்சாப், அரியானாவை சேர்ந்த விவசாயிகள், ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் 4 நாட்களாக போராட்டம்  நடத்தி வருகின்றனர்.

டெல்லி நோக்கி போராட்டம் நடத்த வந்த விவசாயிகள் எல்லையில் கால்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.  இந் நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நிபந்தனையுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று அழைப்பு விடுத்தார்.

ஆனால் அவரது இந்த அழைப்பை 30க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் நிராகரித்துள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சங்கத்தினர், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை விவசாயிகள் தொடர்கின்றனர். எங்கள் தலைவர்கள் கூட்டத்தை ஒத்தி வைத்துள்ளனர். அவர்கள் எந்த முடிவு எடுத்தாலும் பின்பற்றுவோம் என்று கூறியுள்ளனர்.