a
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் விவசாயத்திற்காக தண்ணீர் திருடியதாக விவசாயி ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பண்டல்காண்ட் பகுதியில் கடந்த மூன்று வருடங்களாக மழை பெய்யவில்லை. ஆகவே அங்கு கடும் வறட்சி நிலவுகிறது. . விவசாயத்துக்கு மட்டுமின்றி, , குடிப்பதற்குகூட தண்ணீர் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்.
இந்த நிலையில், அங்குள்ள  உர்மில் என்ற  அணையில் விவசாயி ஹிராலால் யாதவ் (55) என்பவர் தண்ணீர் திருடியதாக போலீசாருக்கு புகார் வந்தது.
அதாவது அணையின் அடைப்பு பகுதியை  சிறிது சேதப்படுத்தி, சிறிய கால்வாய் போல வெட்டி அதன்மூலம் தனது வயலுக்கு ஹிராலால் யாதவ் தண்ணீர் கொண்டு சென்றுவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக மகோபா ஜால் சன்ஸ்தான் என்ற பொறியாளர்  காவல்துறையில் செய்தார். இதையடுத்து, பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக ஹிராலால் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், , அவரைக் கைது செய்தார்கள்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ஹிராலாலின் குடும்பத்தார் மறுத்தனர். . ஏற்கனவே, உர்மில் அணையின் ‘வால்வு’ பகுதி சேதம் அடைந்து இருந்ததாகவும், ஆனால் அரசு தனது குறைபாடுகளை மறைப்பதற்காக வேண்டுமென்றே ஹிராலால் மீது குற்றம் சாட்டியுள்ளது என்றும் அவரது குடும்பத்தார் கூறுகின்றனர்.
ஆனாலும்  தண்ணீர் திருடியதாக விவசாயி ஒருவர் கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.