சொந்த செலவில் அணை கட்டும் விவசாயி!

காராஷ்டிரா மாநிலத்தில் விவசாயி ஒருவர் தனது சொந்த செலவில் அணை ஒன்றை கட்டி வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அகோலா பகுதியை சேர்ந்தவர் விவசாயி சஞ்சய் திட்கே. இவர் தனது  பகுதியில் விவசாயம் செழிக்க,  சொந்த செலவில் அணை கட்டிக்கொண்டிருக்கிறார். மொத்த பட்ஜெட் 20 லட்சம். இதற்காக தனது  10 ஏக்கர் நிலத்தை விற்று அந்த தொகையை கொண்டு, அணை கட்டி வருகிறார்.

maharastra_2

இதுகுறித்து சஞ்சய் திட்கே கூறுவதாவது:

“எங்கள் பகுதியில் மழை காலங்களில் வயல்களில் தண்ணீர் புகுந்து பயிர்கள் நாசமாகிறது. அதே நேரத்தில் கோடை காலத்தில் நீருக்கு திண்டாட வேண்டியிருக்கிறது. இந்த இரு பிரச்சினைகளையும் போக்க அணை தேவைப்படுகிறது. ஆட்சி செய்வோரிடம் எங்கள் கோரிக்கையைச் சொல்லிச் சொல்லி அலுத்துவிட்டது.  ஆகவே சொந்த செலவில் அணை கட்டி வருகிறேன்” என்கிறார்.

 

கார்ட்டூன் கேலரி