மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி: காவல்துறை விசாரணை

பெரம்பலூர் அருகே வயலில் அறுந்துக்கிடந்த மின் கம்பியிலிருந்து மின்சாரம் தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே வசித்து வருபவர் வெங்கடேசன். இவர் விவசாயம் பார்த்து வருகிறார். இன்று காலையில் பயிர்களை பார்வையிடுவதற்காக வயலுக்கு சென்றபோது, அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை வெங்கடேசன் மிதித்திருக்கிறார். இதில் திடீரென மின்சாரம் தாக்கியதால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வெங்கடேசன் மீது மின்சாரம் தாக்கியது குறித்து சிங்காரப்பேட்டை காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.