விவசாயி வம்சம் இனியேதும் விதிசெய்யுமா… டுவிட்டரில் கமல்

சென்னை:
நடிகர் கமல் சமீபகாலமாக அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். முன்பு எப்போதும் இல்லாத வகையில் பல்வேறு சமயங்களில் டுவிட்டர் மூலம் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

இந்த வகையில், கமல் இன்று தனது டுவிட்டரில், ‘‘பாரதி போய் 96 ஆண்டுகளாயிற்று. கவிதையையே பொதுவுடமையாக்கி கல்லாத் தமிழர்க்கும் செவிவழி விதை தூவிய அந்த விவசாயி வம்சம், இனியேனும் விதி செய்யுமா? ’’ என்று தெரிவித்துள்ளார்.