முன்னாள் அறநிலையத்துறை ஆணையாளர் திருமகள் திருச்சி சிலைதடுப்பு பிரிவில் ஆஜர்…

திருச்சி:

யிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலை மாற்றப்பட்ட தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்த  இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் திருமகள் இன்று  திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் திருமகள் ஆஜர் ஆகி கையெழுத்திட்டார்.

சென்னையின் அடையாளச் சின்னமாக விளங்கி வரும் சென்னை  மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், அமைந்துள்ள  புன்னை வனநாதர் சன்னதியில் பழமையான மயில் சிலை இருந்தது.

இந்த சிலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற குடமுழுக்கின்போது மாற்றப்பட்டது. இது தொடர்பான புகாரின் பேரில்,  சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையிலான, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு  காவலர்கள்  வழக்கு பதிந்த இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையாளர்  திருமகளை கடந்த வாரம் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், திருமகள் இன்று திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.