சத்தீஸ்கர்: கரடி தாக்கி விவசாயி பலி

ராய்பூர்:

சத்தீஸ்கர் ராய்பூர் மாவட்டம் கர்சியா வனச்சரகம் அருகே விவசாயியான இந்தல் சிங் ரதியா (வயது 50) என்பவர் தனது நிலத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு குட்டிகளுடன் வந்த பெண் கரடி ஒன்று அவரை பயங்கரமாக தாக்கியது. இதில் ரதியா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

தகவலறிந்த வனத்துறையினர் விரைந்து வநது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கரடியை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.