டெல்லி:  விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை கிடைப்பதை மத்திய அரசு எப்படி உறுதி செய்யும்? விவசாயிகள் முட்டாள்களா என என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக ப.சிதம்பரம்,  தனது டிவிட்டர் பக்கத்தில்சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.

விவசாய மசோதாக்கள் மூலம் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என்று வேளாண்துறை அமைச்சர் கூறுகிறார். ஆனால், எ தனியார் மூலம் விற்பனை என்பது இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் விவசாயிகளுக்கு கிடைக்கும் தொகை என்பது மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை விட மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. வேளாண்துறை அமைச்சர் மாயம் செய்வது போல குறைந்தபட்ச ஆதரவு விலையை கிடைக்கச் செய்ய முடியும் என்றால், அவர் என் இதுவரை அதனைச் செய்யவில்லை?

எந்த விவசாயி தனது விளைபொருளை எந்த வியாபாரிக்கு விற்பனை செய்கிறார் என்பது அமைச்சருக்கு எப்படித் தெரியும்?

இதுபோல நாடு முழுவதும ஒருநாளில் நடக்கின்ற லட்சக்கணக்கான பணப்பரிவர்தனைகளை அமைச்சரால் எப்படி அறிய முடியும்?

அவரிடம் அதுதொடர்பான தகவல்கள் இல்லையென்றால், அவரால் எப்படி குறைந்தபட்ச ஆதரவு விலையை கிடைக்கச் செய்ய முடியும்?

அரசாங்கத்தின் வெற்று வாக்குறுதியை நம்புவதற்கு விவசாயிகள் மிகவும் முட்டாள்கள் என்று அமைச்சரும் அரசாங்கமும் நினைக்கிறார்களா?

ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கில் ரூ .15 லட்சம் வைக்கும் வாக்குறுதியை மோடி அரசு நிறைவேற்றியதா?

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வாக்குறுதியை மோடி அரசு நிறைவேற்றியதா?

ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் உறுதிமொழியை மோடி அரசு நிறைவேற்றியதா?

இவ்வாறு காட்டமாக  பதிவிட்டுள்ளார்.