சென்னை: விவசாயிகள் மசோதா குறித்து விவாதிக்க திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் இன்று  திமுக கூட்டணி கட்சிகிளின் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.

விவசாயிகள் தொடர்பாக மத்தியஅரசு, அத்தியாவசிய பொருட்கள் மசோதா 2020, விலைவாசி தொடர்பான விவசாயிகள் அதிகாரம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்த மசோதா 2020 மற்றும் விவசாயி கள் உற்பத்தி வர்த்தகம் மசோதா 2020 ஆகிய 3 மசோதாக்ளை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றி உள்ளது.

இந்த மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின் றன. இருந்தாலும், எதிர்ப்பை மீறி நிறைவேற்றி உள்ளது.

இந்த நிலையில், விவசாய மசோதாவின் சாதகம் பாதகம் குறித்து, ஆலோசிக்க  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  அனைத்துக்கட்சிக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை – அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.