புதுடெல்லி:
த்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரகாக போராடி வரும் விவசாயிகள் டெல்லி சிங்கு எல்லையில் செங்கல் வைத்து வீடு கட்டத் தொடக்கியுள்ளனர்.

டெல்லியில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் இன்று 81-வது நாளாக தீவிரமடைந்து உள்ளது. குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. இதன்பின்னர் விவசாயிகள் மீண்டும் பழைய இடங்களுக்கு திரும்பி எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விவசாயிகள் டெல்லி சிங்கு எல்லையில் செங்கல் வைத்து வீடு கட்டத் தொடக்கியுள்ளனர். இதுகுறித்து போராட்டக்காரர்களில் ஒருவர் தெரிவிக்கையில், இங்குள்ள ஒவ்வொரு வீட்டை கட்டுவதற்கும் 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் செலவிட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.