தமிழக விவசாயிகள்: மவுனம் காக்கும் மத்தியஅரசை கண்டித்து மரண குழி போராட்டம்!

திருச்சி:

12-kaveri

காவிரியில் தண்ணீர் திறந்துவிட ஒவ்வொரு முறையும்  உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலையே தமிழகத்திற்கு உள்ளது. ஆனால் மத்திய அரசோ கண்மூடி மவுனமாக உள்ளது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோதும் சரி, தற்போது பாரதியஜனதா அரசு இருக்கும்போது சரி காவிரி பிரச்சசினையாகட்டும், முல்லை பெரியாறு பிரச்சினையாகட்டும், பாலாறு பிரச்சனையாகட்டும் மத்திய அரசு ஒருபோதும் தமிழக அரசின் கோரிக்கைகளையோ, தமிழக மக்களின் உணர்வுகளுக்கோ மதிப்பளிப்பது கிடையாது.

தமிழக விவசாயிகளுக்கு உதவி புரியாத மத்திய அரசை கண்டித்தும் ,  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் உரிய நீரை வழங்காத கர்நாடக அரசை கண்டித்தும்  தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர்  திருச்சி மாம்பழச் சாலை காவிரி ஆற்றில் மரணக்குழியில் அமர்ந்து  போராட்டம் நடத்தினர், இன்று காலை இந்த போராட்டம் நடைபெற்றது.

இனி வரும் காலங்களிலும் இதே நிலை நீடித்தால் தமிழக விவசாயிகளின் எதிர்காலமும் இதுபோல் மரண குழியில்தான் தள்ளப்படும் என்று எச்சரிக்கையாக இந்த போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசும் சரி, தமிழக அரசியல்வாதிகளும் சரி எந்தவொரு விசயத்திலும் ஒற்றுமையாக செயல்படாதது மற்ற மாநிலத்தவருக்கு எகத்தாளமாக உள்ளது.  என்று விடியுமோ தமிழக விவசாயிகளுக்கு……

கார்ட்டூன் கேலரி