மு.க.ஸ்டாலினுடன் அய்யாக்கண்ணு திடீர் சந்திப்பு!

--

சென்னை,

ண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுடன் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு இன்று சந்தித்து பேசினார்.

இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வரும் சூழ்நிலையில், விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திது பேசினார்.

தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு இன்று பகல் 12.15 மணிக்கு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் வந்தார்.

அங்கு திமுக செயல்தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.இருவரும் சுமார் 20 நிமிடநேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக தி.மு.க உள்ளிட்ட அனைத்துகட்சியினர் நடத்திய முழுஅடைப்பு போராட்டத்திற்காக நன்றி தெரிவித்துக்கொண்டார்.

விவசாயிகளின் பிரச்சினைக்காக அடுத்த கட்டமாக என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது பற்றியும் மு.க.ஸ்டாலினுடன் விவாதித்ததாக கூறப்படுகிறது.