மகாராஷ்டிராவில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி!! மாநில அரசு அறிவிப்பு

மும்பை:

மகாராஷ்டிராவில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

வறட்சி, பருவம் தவறிய மழையால் இழப்பு காரணமாக விவசாயத்திற்கு வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்யக்கோரி மகாராஷ்டிரா விவசாயிகள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை ரோடில் வீசியும், பாலை கொட்டியும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கடன் தள்ளுபடிக்கு குழு அமைக்கப்பட்டு வரைமுறைகள் உருவாக்கப்படும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

அரசின் இந்த அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாயிகளின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து அரசு விவசாய கடன் தள்ளுபடி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.