ம.பி.யில் காங்.ஆட்சி பதவி ஏற்ற 10 நாளில் விவசாயிகள் கடன் தள்ளுபடி: கமல்நாத் அறிவிப்பு

போபால்:

த்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி பதவி ஏற்றதும், அடுத்த 10 நாட்களில் விவசாயி கள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று, முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமல்நாத் அறிவித்து உள்ளார்.

பாஜகவின் கோட்டையான மத்திய பிரதேச மாநிலத்தில் 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து பாஜகவை தோற்கடித்துவிட்டு, காங்கிரஸ் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்று  ஆட்சியை பிடித்துள்ளது.

அதைத்தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், சட்டமன்ற கட்சித்தலைவராக மூத்த தலைவர் கமல்நாத் தேந்தெடுக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மேலிடமும் அவர் முதல்வராக பதவி ஏற்க பச்சைக்கொடி காட்டி உள்ளது.

இன்று கவர்னரை சந்தித்து பதவி ஏற்க அழைப்பு விடுக்கும்படி கடிதம் கொடுக்கும் கமல்நாத் நாளை பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்நாத், ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தின்போது கொடுத்த வாக்குறுதிப்படி,   10 நாட்களில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உள்ளார்.

மத்திய பிரதேசத்தில்., மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கமல் நாத், மூத்த தலைவர்கள் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, திக்விஜய்சிங் ஆகியோர் பெயர்கள் முதல்வர் பெயரில் அடிபட்டது. திக்விஜய்சிங், கமல்நாத்துக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார். இதனால் கமல்நாத் – ஜோதிர் ஆதித்ய சிந்தியா இடையே போட்டி நிலவி வந்த நிலையில், போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில்  மத்திய பிரதேசம் மாநிலத்தின் முதல்வராக கமல்நாத் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.