உத்திரப் பிரதேசம் : பயிர்களை காக்க பள்ளிகளில் பசு மாடுகள் அடைப்பு

லிகார். உத்திரப் பிரதேசம்

தரவின்றி திரியும் பசு மாடுகள் பயிர்களை மேய்வதால் விவசாயிகள் அவைகளை பள்ளிகளிலும் ஆரம்ப சுகாதார மையங்களில் அடைத்துள்ளனர்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் பகுதியில் தற்போது பயிர்கள் செழித்து அறுவடைக்கு தயாராக உள்ளன.   அவைகளை விவசாயிகள் கால்நடைகள் மேயாமல் காக்க தினமும் காவல் இருக்கிறார்கள்.   அலிகார் பகுதியில் ஏராளமான பசு மாடுகள் ஆதரவின்றி திரிந்து வருகின்றன.   அவை இந்த பயிர்களை இரவில் மேய்ந்து விடுகின்றன.

தற்போது நாடெங்கும் அதிகமாக குளிர் உண்டாகி இருக்கிறது.  குறிப்பாக வட இந்தியாவில் அதிகம் குளிர் காணப்படுகிறது.   இரவு நேரத்தில் குளிருக்கு இடையில்  பயிர்களை காக்க காவல் இருப்பது விவசாயிகளுக்கு தற்போது மிகவும் கடினமாக உள்ளது.   இந்த பசுக்கள் பற்றி அவர்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பயன் இல்லை.

ஆகவே அவர்கள் ஆதரவின்றி திரியும் பசுக்களை இரவு நேரங்களில் பள்ளிகளிலும் அங்குள்ள ஆரம்ப சுகாதார மையங்களிலும் அடைத்து வைத்துள்ளனர்.    இந்த தகவல் வெளியானதை ஒட்டி இன்று அதிகாரிகள் பள்ளிகளிலும்  ஆரம்ப சுகாதார மையங்களிலும் அடைக்கப்பட்ட பசுக்களை மீட்டு பசுக்கள் காப்பகத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.