விளைநிலங்களில் மின்கோபுரங்கள் அமைக்க எதிர்த்து விவசாயிகள் 5வது நாளாக போராட்டம்! 6 பேர் மயக்கம்

திருப்பூர்:

விவசாய விளைநிலங்களின் வழியாக  மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருவதற்கு  எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழகத்தில் மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும் தமிழக அரசின் தமிழ்நாடு மின்தொடர மைப்பு கழகமும் இணைந்து பல்வேறு உயர்மின் அழுத்த மின்பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கான திட்டங்கள் நடைபெற்ற வருகின்றன.

இதன் ஒருபகுதியாக, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் உட்பட 15 மாவட்டங்களில் மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பகுதிகளில் உள்ள  விவசாய விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருவதால், விவசாயிகள் அச்சமடைந்து உள்ளனர்.

இதன் காரணமாக  விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடிட்டில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 13 மாவட் டத்தை சேர்ந்த விவசாயிகள்  கடந்த 5 நாட்களாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களில் 6 விவசாயிகள் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.