டெல்லி: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் டெல்லி சலோ விவசாயிகளின் போராட்டம்  இன்று  31வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதையடுத்து மீண்டும் மத்தியஅரசு , விவசாயிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என விவசாயிகள்  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  டெல்லி சலோ என்ற பெயரில் தலைநகர்  டெல்லியில் விவசாயிகள் கடந்த 30 நாட்களாக தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று போராட்டம் 31வது நாளாக தொடர்கிறது. இதற்கிடையில்,   விவசாயிகளின் தொடர் போராட்டத்தை தடுத்து நிறுத்தும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில், மீண்டும் பேச்சு வார்த்தைக்கு வருமாறு,  மத்தியஅரசு மீண்டும் அழைப்பு வடுத்துள்ளது. ஆனால்,  அரசின் அறிவிப்புக்கு  செவி சாய்க்காமல் போராடி வருகின்றனர்.

இருந்தாலும் மத்தியஅரசு தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து கடிதம் எழுதி உள்ளது. அதுகுறித்து விவசாய அமைப்புகள் ஆலோசித்து வருகின்றனர். இந்த ஆலோசனையின்போது,  சில விவசாய அமைப்பினர் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடரலாம் என்று  வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.   இதையடுத்து, இன்று மீண்டும் விவசாயிகள் மீண்டும் கூடி ஆலோசிக்கிறார்கள். அதன்பின்னர், மத்திய அரசுடன் விவசாய அமைப்பினர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.