டெல்லி:  தலைநகர் டெல்லி எல்லையில் நடைபெற்றும் வரும் விவசாயிகள் இன்று 40வது நாளாக தொடர்கிறது. இதற்கிடையில், இன்று நடைபெறும் விவசாயிகள் அரசு உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்துவதாக விவசாயிகள்அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.

மத்தியஅரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும என வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள், எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  டெல்லி மாநில எல்லையில் வடமாநில விவசாயிகள்,  போராட்டம் நடத்தி வருகின்றனர்.   கடுமையான குளிரிலும் இரவு–பகலாக வெட்டவெளியிலேயே தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.  நேற்று அங்கு கடும் மழை பெய்த நிலையில், அதையும் சமாளித்து  போராட்டம் இன்று 40வது நாளை எட்டியுள்ளது.

இந்த நிலையில்,  இன்று ( 4ந்தேதி)  மீண்டும் விவசாய சங்கங்களுக்கும், மத்தியஅரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாவிட்டால் போராட்டம் தீவிரமாக்கப்படும் என விவசாய சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.