விவசாயிகள் போராட்டம் 43வது நாள்: டெல்லியில் டிராக்டர்களுடன் விவசாயிகள் பேரணி ஒத்திகை…

டெல்லி: தலைநகர் டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் கடூங்குளிர் மற்றும் கொட்டும் மழையிலும் இன்று 43வது நாளாக தொடர்கிறது.  இன்று  விவசாயிகள் டெல்லி எல்லையில் டிராக்டர் பேரணி ஒத்திகை  நடத்தி வருகின்றனர்.

மோடி தலைமையிலான மக்கள் விரோத மத்திய அரசு கொண்டு வந்துள்ள  3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்பட வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.  போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்தியஅரசு வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக, , விவசாய அமைப்புகளுடன் 7 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது உள்ளது. ஆனால்,எந்த முடிவும் எட்டப்படவில்லை.

வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப்பெற்றே ஆக வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருப்பதால், பேச்சுவார்த்தையில் இழுபறி தொடர்ந்துவருகிறது. இன்று (8ந்தேதி) 8வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இன்றைய போராட்டத்தில் தீர்வு ஏற்படாவிட்டால், 26-ந் தேதி குடியரசு தினத்தன்று டெல்லி ராஜபாதையில் டிராக்டர் அணிவகுப்பை பிரமாண்டமாக நடத்தப் போவதாக அறிவித்து உள்ளனர்.

இந்த  நிலையில், டிராக்டர் பேணிக்க்கான போராட்டத்துக்கான ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடங்கி உள்ளது. விவசாயிகள் தங்கள் டிராக்டர்களுடன்,  டெல்லியில் உள்ள கிழக்கு மற்றும் மேற்கு எக்ஸ்பிரஸ் சாலையில் இந்த அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுகிறது. முதலில் காசிபூர் எல்லையில் டிராக்டர் பேரணியை தொடங்கினர். இதன் காரணமாக அந்த பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.