Random image

தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: திருவாரூரில் பரபரப்பு

திருவாரூர் :

ருகும் சம்பா பயிர்களை காக்க தண்ணீர் திறக்க வலியுறுத்தி திருவாரூரில்-திருத்துறைபூண்டி சாலையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.  தற்போது மழை இல்லாததால் சம்பா பயிர் தண்ணீரின்றி கருகி வருகிறது. கருகும் சம்பா பயிர் களை காப்பாற்ற  வெள்ளையாறு, பாண்டவையாறுகளை திறந்து தண்ணீர் விட வேண்டும் என்று வலியுறுத்தி ஐந்து ஊராட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுடனர்.

திருவாரூரில்-திருப்புறைத் பூண்டி சாலையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறையில் அங்கு வந்து விவசாயிகளை அப்புறப்படுத்தனர்.