யநாடு

த்திய அரசின் வேளாண் சட்டங்கள் பற்றி முழுமையாகத் தெரிந்தால் நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்துவார்கள் என ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.

வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கேரள மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இதையொட்டி அங்கு அனைத்துக் கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளனர்.  அவ்வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தனது வயநாடு தொகுதிக்கு 2 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அவர் அங்குள்ள கல்பேட்டா  நகரில் காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.  ராகுல் காந்தி தனது உரையில், “பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகள் மீதான சமீபத்திய கொலைவெறித் தாக்குதல் ஆகியவற்றால் விவசாயிகள் டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகப் போராடி வருகிறார்கள். இந்த வேளாண்துறைக்கு விரோதமான சட்டங்களை மத்திய அரசு  திரும்பப் பெற வேண்டும்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டங்கள் குறித்து பெரும்பாலான விவசாயிகளுக்கு  முழுமையான விவரங்கள் தெரியவில்லை.   அவ்வாறு தெரிய வரும் போது தற்போது டில்லியில் நடைபெறும் போராட்டத்தை விவசாயிகள் நாடு முழுவதும் நடத்துவார்கள்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு, மத்திய விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை ஆகியவற்றைப் பயன்படுத்தி, எதிர்க்கட்சிகள் ஆளும் அரசுகளுக்கு எதிராக செயல்பட வைக்கின்றன. அதே வேளையில் சட்டப்பேரவைத் தேர்தல் வர சில மாதங்கள் இருக்கும் நிலையில், கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசுக்கு அவ்வாறு எந்த நெருக்கடியும் இல்லை.  ஏனெனில் இங்கு சிபிஐ, அமலாக்கப் பிரிவு ஆகியவை அரசுக்கு மிகவும் சவுகரியமாக வழக்குகளை விசாரிக்கின்றன

தற்போது நாட்டில் இருக்கும் சூழல் உங்களுக்குத் தெரியும்.  அனைவரும் என்ன நடக்கிறது எனப் பார்க்கிறார்கள். இந்தியாவை இப்போது 2 அல்லது 3 பெரும் கோடீசுவரர்களுக்காகத்தான் பிரதமர் மோடி ஆட்சி செய்கிறார்.  நாட்டில் ஒவ்வொரு சிறிய நிறுவனமும் குறிப்பிட்ட 4 தொழிலதிபர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

இந்தியாவில் உள்ள 5 முதல் 10 நபர்கள் விவசாயிகளின் மற்றும் ஒவ்வொரு தொழிலாளர்களின் உற்பத்தியையும் திருடுகிறார்கள்.  மொத்த மண்டிகளில் பணியாற்றும் தொழிலாளரிடம் இருந்தும், லாரி ஓட்டுநர்களிடம் இருந்தும் திருடுகிறார்கள்.  அத்துடன் இந்தத் திருட்டை நிர்வகிப்பவரே பிரதமர்தான். இந்த விவசாயிகளுக்கு எதிரானது மட்டும் அல்ல, தேசத்துக்கு எதிரானது” எனத் தெரிவித்துள்ளார்.