காதலர் தினத்தன்று (பிப்ரவரி14ந்தேதி)  பிரதமர் மோடிக்கு ரோஜாக்களை அனுப்புங்கள் என்று உலகெங்கிலும் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோரின் முற்போக்குவாதி களின் கூட்டணியான குளோபல் இந்தியன் முற்போக்கு கூட்டணி (Global Indian Progressive Alliance)  அழைப்பு விடுத்துள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தொடரும் நிலையில், விவசாயிகளின் மீதான வெறுப்பை குறைத்து, அன்பை பெருக்கும்  வகையில்,குளோபல் இந்தியன் முற்போக்கு கூட்டணி, பிரதமர் மோடிக்கு காதலர் தினத்தன்று ரோஜாக்களை அனுப்புங்கள்  அல்லது டிவிட் செய்யுங்கள் என்று தெரிவித்து உள்ளது.

மத்தியஅரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் 2 மாதங்களை கடந்தும் நீடித்து வருகிறது. இந்திய விவசாயிகளின் போராட்டம் உலக நாடுகளை ஈர்த்துள்ள நிலையில், உலகம் முழுவதும் வாழும் புலம்பெயர்ந்தோர் அமைப்பு,  விவசாயிகளுக்கு ஆதரவளித்து வருகிறது. இதன் அடுத்த நகர்வாக,  பிப்ரவரி 14 அன்று காதலர் தினத்தன்று, விவசாயகிளின் மீதான வெறுப்பை அன்பாக மாற்றும் வகையில்,  பிரதமர் நரேந்திர மோடிக்கு ரோஜாவை அனுப்புங்கள் என மக்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளது.

இதுதொடர்பாக  உலகெங்கிலும் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோரின் முற்போக்குவாதிகளின் கூட்டணியான குளோபல் இந்தியன் முற்போக்கு கூட்டணி (ஜிபா) பிப்ரவரி 10 அன்று “விவசாயிகளின் மீதான வெறுப்பை காதல் வெல்லும்” என்ற பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளது.