Random image

விவசாய நிலங்களில் மின்கோபுரங்கள் விவகாரம் : விவசாயிகள் போராட்டம் வாபஸ்

திருப்பூர்:

விளைநிலங்கள் வழியாக உயர்மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து  கடந்த 14 நாட் களாக  நடைபெற்று வந்த  போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும் தமிழக அரசின் தமிழ்நாடு மின்தொடர மைப்பு கழகமும் இணைந்து பல்வேறு மாவட்டங்களில்  உயர்மின் அழுத்த மின்பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த மின் கோபுரங்கள்  விளைநிலங்கள் வழியாக அமைக்கப்படுவதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து  திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட 8  மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. வரும் 3ந்தேதி சென்னையில்  சட்டப்பேரவையை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகளின் கூட்டியக்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தற்போது விவசாயிகள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டு உள்ளது.