கொரோனா நெறிமுறைகளை போராட்டக்காரர்கள் அவசியம் பின்பற்ற வேண்டும்: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

டெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி சலோ என்று பெயரிடப்பட்டு உள்ள இந்த போராட்டத்தில் அரியானா, பஞ்சாப் மாநிலங்களின் விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கோரிக்கையையும் நிராகரித்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறி இருப்பதாவது:

முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது போன்ற கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். ஆரோக்கியத்திற்கு இது மிகவும் முக்கியம் என்றார்.