‘விவசாயிகள் விற்பனைக்கு இல்லை’: பிரதமர் மோடிக்கு போராட்டக்குழு தலைவர் காட்டமான பதில்….

டெல்லி: ‘விவசாயிகள் விற்பனைக்கு இல்லை’ பிரதமர் மோடிக்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கத்தினர் பதிலடி கொடுத்துள்ளனர்.

பிரதமர் மோடி, 2வது கட்டமாக பிரதமர் கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ்  நாடு முழுவதும் 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கான நிவாரணமாக ரூ.18,000 கோடியை நேற்று தொடங்கி வைத்தார்.  அதைத்தொடர்ந்ருது, வீடியோ கான்பரன்சிங் விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.

நிகழ்ச்சியில் பேசிய  மோடி,  “விவசாயிகள் கடன் அட்டையின் பயன்கள், குறைந்த வட்டியில் கடன் திட்டம் குறித்து ஒடிஷா விவசாயிகள் எடுத்துரைக்க வேண்டும். என்றவர், ஒப்பந்த முறையில் விவசாயம் மேற்கொண்டால் நிலம் பறிபோகும் என்று விவசாயிகளிடத்தில் சிலர் அச்சம் ஏற்படுத்தி வருவதோடு , கற்பனையான பொய்களையும் பரப்புகின்றனர் என்று எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சாட்டியவர்,

மேற்கு வங்கத்தில் கட்சிகள் விவசாயிகளின் நலன்களுக்காகப் பேசவில்லை.  ஆனால், அவர்கள் டெல்லிக்கு வந்து விவசாயிகள் நலன்கள் பற்றி பேசுகின்றனர்.  கேரளாவில் ஏபிஎம்சி மண்டிகள் இருக்கின்றனவா? இல்லையே… ஆனால்,  இந்தக் கட்சிகள் கேரளாவில் மண்டிகள் இல்லாததைப் பற்றி பேச மறுக்கின்றனர். இவர்கள் கேரளாவில் போராட்டம் செய்வார்களா? என்று கேள்வி எழுப்பியதுடன், வசாயிகளின் நிலங்களை தனியார் நிறுவனங்கள் அபகரித்து விடும் என்று பொய்மைகளைப் பரப்புகின்றனர். ஆனால் அருணாச்சலப் பிரதேசத்தின் குக்கிராமங்களில் இருக்கும் விவசாயிகள் கூட அறிவார்கள் நிறுவனங்கள் நிலத்தை அபகரிக்க முடியாது என்பதை” என்று கூறினார்.

ஆனால், பிரதமரின் கூற்றை விவசாய சங்கத்தினர் ஏற்க மறுத்து வருகின்றனர்.  மத்தியஅரசு, பிரதமர்-கிசான் சம்மான் நிதி திட்டம்  செயல்படுத்துவதால்,  விவசாயிகள்  தங்களை விற்பனை செய்ய மாட்டார்கள் என்று காட்டமாக பதில் அளித்துள்ளனர்.

டெல்லியில் நடைபெற்று வரும் வடமாநில விவசாயிகளின் போராட்டம்  இன்று 31வது நாளாக தொடர்ந்து வருகிறது. இன்று முதல்   “திக்கர் திவாஸ்” என்று அனுசரிக்கவும், அம்பானி மற்றும் அதானி தயாரிப்புகள் மற்றும் சேவைகளை புறக்கணிக்கவும்  முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மைய அரசின்  புதிய சட்டங்கள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக,  பாஜகவுக்கு அதிக நன்கொடை அளித்த நிறுவனங்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்ற அம்பானி நிறுவன தயாரிப்புகளை புறக்கணிக்க முடிவு செய்யதுள்ளது என்று, ஆறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுடன் மட்டுமே  மோடி  கலந்துரையாடினார் என்று,   “இது தவறான, போலி மற்றும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளின் இணைவு என்றும் போராட்டக்குழு தலைவர் அவிக் சஹா தெரிவித்துள்ளார்.

மோடியின் பேச்சு,  விவசாயிகளை சோர்வடையச் செய்வதற்கான தந்திரோபாயம் என்றும், இது எங்களிடையே  பலனளிக்காது என்பதை  தெளிவுபடுத்தியதுடன், வேளாண் சட்டங்களுக்கு எதிரான எங்கள் போராட்டத்தில், பல விவசாயிகள் விவசாயத்தால் கடினப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர், இது அவர்களுக்கு பொறுமையையும் கற்றுக் கொடுத்தது.

டெல்லியின் வாசலில் உட்கார்ந்திருப்பவர்களை அவர்களின் கோரிக்கைகளுடன் புறக்கணித்து, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் பேசியதற்காக மோடியை கடுமையா சாடிய,  சஹா, பி.எம்-கிசான் திட்டத்தில், 2019 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டு, டிசம்பர் 2018 முதல் பின்னோக்கி விளைவைக் கொடுத்ததாகவும்,  “நீண்ட காலமாக நடந்து வரும் இந்தத் திட்டத்தைப் பற்றி பிரதமர் ஏன் இப்படி ஒரு பாடலையும் நடனத்தையும் தேர்வு செய்தார்? என்பது  “பிரதமர்,  அவர் விரும்பும் நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக அவர் ஒரு முடிவை எடுத்துள்ளார்” என்றும் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, “FarmersNotOnSale” என்ற ஹெஸ்டேக் சோசியல் மீடியாவில் டிரெண்டிங்காகி வருகிறது.