பயிர் கடனை உடனடியாக தள்ளுபடி செய்ய விவசாயிகள் கோரிக்கை… வீடியோ

சேலம் :

கொரோனா வைரஸ் காரணமாக 50 நாட்களுக்கு மேல் ஊரடங்கு நீடித்து வரும் நிலையில், நாட்டில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் வாழ்வாதாரம் இழந்து வருகின்றனர்.

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை உரிய நேரத்தில் அறுவடை செய்ய முடியாமலும், அறுவடை செய்த பயிர்களை விற்க முடியாமலும், விளைந்த பயிர்களில் தங்கள் கால்நடைகளை கொண்டு மேய்க்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 12 ம் தேதி 3 வது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரூபாய் 20 லட்சம் கோடியிலான திட்டங்கள் வெளியிடப்படும் என்று கூறியதோடு, அந்த திட்டத்திற்கு, ‘சுய சார்பு பாரதம்’ என்று தலைப்பிட்டிருந்தார்.

பிரதமர் அறிவித்த மறுதினத்தில் இருந்து தொடர்ந்து 5 நாட்கள், விவசாயிகளுக்கு பயிர்களுக்கான இழப்பீடு (CAMPA) ரூ. 6000 கோடி உள்ளிட்ட பல்வேறு, செலவினங்களில் ரூபாய் 20 லட்சம் கோடி அரசுக்கு செலவாகி இருப்பதாக தெரிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த சுய சார்பு பாரதம் திட்ட அறிவிப்பின் போது பாதுகாப்பு துறையில் 74% அந்நிய முதலீடு, ரூ. 200 கோடிக்கு கீழ் உள்ள ஒப்பந்தங்களில் அந்நிய நிறுவனங்களுக்கு தடை, விமான நிலையங்களில் தனியார் நிறுவனங்கள் பங்களிப்பு போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்திருந்தார்.

பாதுகாப்பு துறையில் அந்நிய முதலீட்டை உயர்த்தியுள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ரபேல் விமான ஒப்பந்தம் குறித்த ஆவணங்கள் திருடப்பட்டதாகவும் பின் அது நகல் எடுக்கப்பட்டதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வாழ்வாதாரம் இழந்த தொழிலாளர்களுக்கோ, விவசாயிகளுக்கோ, சாமானிய மக்களுக்கோ எந்த வித நிவாரண தொகையும் அறிவிக்கவில்லை, என்பது பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள ஐக்கிய விவசாய சங்க மாநில தலைவர் வையாபுரி அவர்கள், பயிர்க் கடனை உடனடியாக தள்ளுபடி செய்ய கோரிக்கை வைத்துள்ளார், மேலும்

விவசாயிகளுக்காக நீங்கள் அறிவித்த கடனை எந்த வங்கியில் சென்று வாங்க முடியும் என்று சொல்ல முடியுமா ?

விவசாயிக்கு பெரிதும் உறுதுணையாய் இருக்கும் கால்நடைகளை பற்றி எந்த கவலையும் படவில்லை, அதற்கான நிவாரணமும் அறிவிக்கவில்லையே ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இணைப்பு வீடியோ..