டில்லி:

விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் பிரச்னையை ஒரு இரவில் தீர்த்துவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று கருத்து தெரிவித்துள்ளது. மேலும், கடந்த ஒராண்டாக பசல் பீமா யோஜனா திட்டம் மூலம் விவசாயிகள் நலன் சார்ந்து மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்த மத்திய அரசின் கருத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

supreme

தலைமை நீதிபதி கேஹர், நீதிபதி சந்திரசுத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் கூறுகையில்,‘‘ விவசாயிகளின் பிரனைகளை அறிகிறோம். அதே சமயம் விவசாயிகள் தற்கொலை ஒரு இரவில் தடுத்துவிட முடியாது. இது தொடர்பான ஆக்கப்பூர்வ முடிவுகளை தெரிவிக்க அட்டர்னி ஜெனரல் கேட்டிருக்கும் அவகாசம் நியாயமாக உள்ளது’’ என்றனர்.

மத்திய அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களை அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதனால் நல்ல முடிவுகளை தெரிவிக்க போதுமான அவகாசம் வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

‘‘பாசல் பீமா யோஜனா திட்டத்தில் மொத்தம் உள்ள 12 கோடி விவசாயிகளில் 5.34 கோடி இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். 30 சதவீத விவசாய நிலம் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டில் இந்த அளவீடு உயரும்.விவசாயிகளின் பிரச்னைகளை ஒரே இரவில் தீர்த்துவிட முடியாது’’ என்று தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் 6 மாத கால அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். விவசாயிகள் தற்கொலை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த பொதுநல வழக்கு விசாரணையில் தான் உச்சநீதிமன்றம் இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளது.