டில்லி,

விவசாயிகள் தற்கொலை தொடர்பான  மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

 

நாடு முழுவதும் நிகழ்ந்து வரும் விவசாயிகள் தற்கொலையை தடுக்க மத்திய மாநில  அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் விவசாயிகளின் தற்கொலையை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் எந்த திட்டமும் இல்லாதது ஏன் என்றும் கேள்வி கேட்டுள்ளது.

விவசாயிகள் கடன்களை திரும்பச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்து உள்ளது.

விவசாயிகளின் தற்கொலை விவகாரங்கள் மற்றும் புதிய பயிர் காப்பீட்டு கொள்கைகள் குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் மத்திய, மாநில அரசுக்ளுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

மேலும் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக 4 வாரத்தில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.