டில்லி கூட்டத்தில்  விவசாயிகள் வெளிநடப்பு

டில்லி

டில்லியில் நடந்த ஒரு கூட்டத்தில் வேளாண் அமைச்சர் வராததால் அதில் கலந்துக் கொண்ட விவசாயிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

சமீபத்தில் பாஜக அரசு நிறைவேற்றியுள்ள விவசாய சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.

நாடெங்கும் இந்த சட்டத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

அந்த போராட்டத்தில் விவசாயிகளும் கலந்து கொண்டு இந்த சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் டில்லியில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் வேளாண் அமைச்சர் கலந்துக் கொள்வதாக இருந்தார்.

அவரை சந்தித்து இந்த போராட்டங்களுக்கு ஒரு தீர்வு காண ஏராளமான விவசாயிகள் காத்திருந்தனர்.

திடீரென வேளாண் அமைச்சர் கலந்துக் கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டது.

கோபம் அடைந்த விவசாயிகள் விவசாய சட்ட நகல்களைக் கிழித்தெறிந்து விட்டு வெளிநடப்பு செய்துள்ளனர்.