விவசாய மசோதாவால் விவசாயிகளுக்கு எந்த சூழலிலும் பாதிப்பும் ஏற்படாது! வக்காலத்து வாங்கும் அமைச்சர்சர் தங்கமணி

சென்னை: மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள விவசாய மசோதாக்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், விவசாயிகளுக்கு எந்த சூழலிலும், எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வேளாண் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி, மத்தியஅரசு 3 விவசாய மசோதாக்களை நிறைவேற்றி உள்ளது. இதனால், மாநிலங்களைவையில் கடுமையான சலசலப்பு ஏற்பட்டது.  இந்த சட்டங் களுக்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வடமாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில்,  மத்தி அரசு கொண்டுவந்துள்ள விவசாய திட்டங்கள் விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாது, விவசாயி என்ற முறையில் எனக்கு தெரியும் என்று முதல்வர் பழனிசாமி தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த நிலையில்,  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி அடிக்கல் நாட்டிய பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது,  இந்த மசோதாக்களால், விவசாயிகளுக்கு எந்த சூழலிலும், எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வேளாண் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.